தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து, பணியை துவங்கும் வகையில், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை அமல்படுத்தி உள்ளது.
ஆசிரியர்கள் காலையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி பணிக்கு வர வேண்டும் என, மாவட்ட வாரியாக நேரம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நிர்ணயித்த நேரத்தில் வராதவர்களுக்கு, வேலை நேரத்துக்கு ஏற்ற வகையில், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
சமீப காலமாக, ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வரவில்லை என, புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவை ஆய்வு செய்து, தாமதமாக வருவோருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இதன்படி, நேற்று முதல் நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உரிய விளக்கம் அளிக்காதவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. அதனால், நோட்டீஸ் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக