இந்த வலைப்பதிவில் தேடு

மத்திய அரசு பணி: 20க்குள் விண்ணப்பிக்கலாம்

வியாழன், 27 பிப்ரவரி, 2020


மத்திய அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, மார்ச், 20 வரை, தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், தென் மண்டல இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளில், எட்டாம் நிலையில், 244 வகையான பதவிகளில் காலியாக உள்ள, 1,157 பணியிடங்களுக்கு, கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது.இதில், ஒன்பது பதவிகளுக்கான, 32 காலிப் பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், சென்னை மண்டலத்துக்கு உட்பட்டவை. இவற்றில், ஏழு வகையான பதவிகள், பட்டதாரி அளவிலும், ஒரு பதவி, மேல்நிலைக் கல்வி அளவிலும், ஒரு பதவி, மெட்ரிக் அளவிலும் பூர்த்தி செய்யப்பட உள்ளன.


கல்வித் தகுதி மற்றும் பணி நிலை தொடர்பான விரிவான விபரங்கள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், ssc.nic.in மற்றும் தென்மண்டல அலுவலகத்தின், sscsr.gov.in ஆகிய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும், அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும், தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் படைவீரர், போர் வீரர்களின் விதவையர் உள்ளிட்ட பிரிவினரும், கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள், பிப்., 21 முதல், மார்ச், 20 வரை, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கான தேர்வு, ஜூன், 10 முதல், 12ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent