இந்த வலைப்பதிவில் தேடு

நாளை BEO தேர்வு - 24 கடுமையான விதிமுறைகளை அறிவித்தது TRB

வியாழன், 13 பிப்ரவரி, 2020



ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் பணியாளர் தேர்வுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்ப  நாளை முதல் 16ம் தேதி வரை வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு நடைபெறவுள்ளது.


இதற்காக 24 கடுமையான விதிமுறைகள் டி.ஆர்.பி. வகுத்துள்ளது. நாளை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் காலியாக இருக்கக்கூடிய வட்டார கல்வி அலுவலர்களுக்கான கணினிவழி தேர்வு நடைபெறவிருக்கிறது. இதற்காக 57 தேர்வு மையங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற கூடிய இந்த தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்திருக்கக்கூடிய டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளையொட்டி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 24 கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

*ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கடவு சீட்டை வைத்துக்கொண்டு தேர்வறைக்கு வரவேண்டும்.

* வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்ட் ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

* ஹால் டிக்கெட்டில் உள்ள படத்துடன் தேர்வர் முகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


* சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதில் வைத்திருக்க வேண்டும்.

* தேர்வு மையத்திற்குள் நகை அணிந்து செல்ல தடை.

* தேர்வர்கள் வெளியிலிருந்து பேனா, பேப்பர் எடுத்து செல்ல தடை.

* மேஜிக் பேனா மோசடியை தடுக்க தேர்வறையிலேயே பேனா வழங்குகிறது டி.ஆர்.பி.

* வாட்ச், பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேர்வர்களுக்கு இந்த முறை தேர்வு நடைபெறும் பகுதியானது புதிதாக ஒதுக்கப்படவிருக்கின்றது. தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் எந்த பகுதியில் தேர்வு எழுத போகின்றனர் என்ற தகவல் அவர்களுக்கே கிடைக்கப்பெறும்.


குறிப்பாக இந்த முறை அவர்கள் தேர்வு செய்திருக்கக்கூடிய நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. தூத்துகுடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களளை தேர்வு செய்தவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம்  போன்ற பகுதிகளும், அதேபோல கோயம்புத்தூரை சேர்ந்தவர்களுக்கு கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்திருக்கக்கூடிய இந்த டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் முன்கூட்டியே திட்டமிட்ட அந்த தேர்வு அறை மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. எனவே இந்த முறை டி.ஆர்.பி. நடத்தக்கூடிய இந்த தேர்வில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.


நீட் தேர்வில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் நடைபெறவிருக்கும் இந்த தேர்விலும் எந்த முறைகேடும் நடைபெறகூடாது என்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து எந்த காரணத்திற்கொண்டும் தேர்வு மையங்கள் மாற்றப்படாது என்று டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent