இந்த வலைப்பதிவில் தேடு

ஜாக்டோ-ஜியோவுடன் அரசு பேச வேண்டுகோள்

திங்கள், 3 பிப்ரவரி, 2020



ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகள் குறித்து, சங்க தலைவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பொது செயலாளர் கூறினார்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் மாநில பொதுச்செயலாளர் செல்வம் அளித்த பேட்டி: கடந்த 2019ம் ஆண்டு ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்த போராட்டம், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. போராட்டத்தின் போது தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் அடிப்படையில் தற்காலிகமாக வாபஸ் பெற்றோம். 

அதன் பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு எங்களுடன் பேசவில்லை.


சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அரசு ஊழியர் ஆசிரியர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது 17பி, 1500 பேர் பணிமாறுதல் ஆகிய பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும் என அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினோம். 


ஆனால் கோரிக்கைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கைகள் குறித்து அழைத்து பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எங்கள் சங்க செயற்கூழு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent