இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 03.02.2020

திங்கள், 3 பிப்ரவரி, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்


திருக்குறள்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

பொருள்:

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.


பழமொழி

A good face needs no paints

அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை.

இரண்டொழுக்க பண்புகள்

1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.

2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.

பொன்மொழி


ஆகச்சிறந்த பண்பு என்பது எக்காலத்திலும் பண்பாடு மாறாமல் இருப்பதாகும்.

------- காமராசர்

பொது அறிவு

1.நறுமண பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

 கேரளா

2.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதங்கள்?

22 மாதங்கள்

English words & meanings

Geoponics – study of agriculture. விவசாயம் குறித்த படிப்பு.

Garish - unpleasant decoration.வீண் பகட்டுத் தோற்றம் கொண்ட

ஆரோக்ய வாழ்வு

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, லைகோபீனே மற்றும் தோலிற்கு நன்மைபயக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (ஆன்டிஆக்சிடென்ட் ) அதிக அளவில் காணப்படுகிறது.

Some important  abbreviations for students

div. - division. 

distr. - distributed

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

கோபத்தை மறந்த ராமு

குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம் :
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.

ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.

ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.

அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.

நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

03.02.20


* கொரோனா தாக்குதலினால் சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது.

* இனி சிக்னலில் ஹாரன் அடித்தால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியது தான்....மும்பை போலீஸ் அதிரடி.

* ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான 10 ஆண்டு காலத் திட்டம் : தமிழ்நாட்டுக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு வெளியீடு.

* நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 தொடரை வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

Today's Headlines

🌸Due to Corona Virus attack the e-visa is cancelled for those who coming from China to India.

🌸 As Pakistan is suffering from Locusts which destroyed the crops Pakistan declared emergency.

🌸 If you blow horn in the signal you will have to wait more - Mumbai Police.

🌸 A Project Outline was mapped out for the change in climate of Tamil Nadu - three lakhs crore and 10 years.

🌸 India made a historic victory against New Zealand and won match by 5-0 in the last T20 five sets match.

Prepared by
Covai women ICT_போதிமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent