இந்த வலைப்பதிவில் தேடு

மரபுத் தொடர்கள் விளக்கம் !!

புதன், 26 பிப்ரவரி, 2020



ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழி வழியாக (மரபு வழியாக)  வழங்கிவரும் பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் எனப்படும்.
பொதுவாக வழங்கும் மரபுத் தொடர்கள் , சமூகத்திற்கு சமூகம் வழங்கப்படும் மரபுத்தொடர்கள் எனும் அடிப்படையில் பல மரபுத்தொடர்கள்  தமிழில் காணப்படுகிறன.
இதன் ஆங்கிலப் பதம் idioms and phrases என்பதாகும்.

மரபுத் தொடர்களுக்கான உதாரணங்கள்

[ அ ]
   01 . அள்ளிக் குவித்தல் - நிறையச் சம்பாதித்தல்
02 . அறைகூவுதல்- போருக்கு அழைத்தல்
03 . அரை மனிதன் - மதிப்பில்லாதவன்
04 . அண்டப்புழுகன்- பொய்காரன்
05. அலைக்கழித்தல்- அலட்சியம் செய்தல்
06. அறுதியிடுதல் - முடிவுகட்டுதல்
07. அகடவிகடம்- தந்திரம்
08. அரைப்படிப்பு - நிரம்பாத கல்வி
09. அடியொற்றுதல்- பின்பற்றுதல்
10. அள்ளியிறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்
11. அடுக்கு பண்ணுதல் - ஆயத்தம் செய்தல்
12. அடியிடுதல் - தொடங்குதல்
13. அடிநகர்தல்- இடம்பெயர்தல்
14. அடிபிழைத்தல் - நெறி தவறி நடத்தல்
15. அடி திரும்புதல்- பொழுது சாய்தல்
16. அடிப்பிடித்தல்- தொடருததல்
17. அடி பிறக்கிடுதல் - பின்வாங்குதல்
18. அரக்கப் பறக்க - விரைவாக
19. அடியுறைதல் - வழிப்படுத்தல்
20. அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்
21. அகலக் கண் வைத்தல் - அளவு கடந்து போதல்
22. அழுங்குப்பிடி - விடாப்பிடி
23. அறுதியிடல் - முடிவு கட்டுதல்
24. அமளி செய்தல் - குழப்பம் செய்தல்
25. அடி பணிதல் - கீழ்ப்பணிதல்
26. அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச் செய்தல்
27. அகலக் கால் வைத்தல் - அளவுகடந்து போதல்

[ ஆ ]
28. ஆகாயக் கோட்டை - மிதமிஞ்சிய கற்பனை
29. ஆறப்போடல் - பிற்போடல்
30. ஆசை வார்த்தை - ஏமாற்றுப் பேச்சு
31. ஆட்கொள்ளல் - அடிமை கொள்ளல்
32. ஆழம் பார்த்தல் - ஒருவரின் தகுதி பற்றி ஆராய்தல்
33. ஆயிரம்காலத்து பயிர் - நெடுங்காலம் நிலைத்திருத்தல்
34. ஆடாபூதி - ஏமாற்றுக்காரன்

[ இ ]
35. இரண்டும் கெட்டான் - நன்மை தீமை அறியாதவன்
36. இலை மறை காய் - வெளிப்படாது மறைந்திருத்தல்
37. இளிச்சவாயன் - எளிதில் ஏமாறுபவன்
38. இட்டுக்கட்டுதல் - இல்லாததை சொல்லுதல்
39. இலவு காத்த கிளி - காத்திருந்து ஏமாறுதல்
40. இரண்டு தோணியில் கால் வைத்தல் - ஒரே நேரங்களில் இரு செயல்களில் ஈடுபடல்

[ ஈ ]
41.  ஈரல் கருகுதல் - வேதனை மிகுதல்
42.  ஈவிரக்கம் - கருணை
43.  ஈயோட்டுதல் - தொழிலெதுவுமின்றி இருத்தல்
44. ஈடேறுதல் - உயர்வடைதல்

[ உ ]
45. உள்ளங்கையில் நெல்லிக்கனி - வெளிப்படையாக தெரிதல்
46. உதவாக்கரை - பயனற்றவன்
47. உப்பில்லாப் பேச்சு - பயனற்ற பேச்சு
48. உச்சி குளிர்தல் - மிக்க மகிழ்ச்சி அடைதல்
49. உருக்குலைதல் - தன்னிலையிலிருந்து மாறுபடல்
50. உலை வைத்தல் - பிறருக்கு அழிவு வருவித்தல்

உடல் உறுப்புகள் பற்றிய மரபுத்தொடர்கள்

1.
அடி பற்றிய மரபுத்தொடர்கள்

01. அடியொற்றுதல் - பின்பற்றுதல்

02. அடிநகர்தல் - இடம்பெயர்தல்

03. அடிபணிதல் - கீழ்ப்படிதல்

04. அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச்செய்தல்

05. அடியிடுதல் - ஆரம்பித்தல்

2.
கண் பற்றிய மரபுத்தொடர்கள்

01. கண் வைத்தல் - விருப்பம் கொள்ளுதல்

02. கண்வளர்தல் - நித்திரை செய்தல்

03. கண்ணெறிதல் - கடைக்கண்ணால் பார்த்தல்

04. கண்கலத்தல் - ஒருவரை ஒருவர் விரும்புதல்

05. கண்மூடுதல் - இறத்தல்

06. கண் திறத்தல் - அறிவுண்டாதல்

3.
கழுத்து பற்றிய மரபுத்தொடர்கள்

01. கழுத்துக்கொடுத்தல் - பிறர் துன்பத்தில் உதவுதல்

02. கழுத்தறுத்தல் - நம்பிக்கை துரோகம் செய்தல்

03. கழுத்திற்கட்டுதல் - வலிந்து திணித்தல்

04. கழுத்தைக்கட்டுதல் - விடாமல் நெருக்குதல்

4.
காது பற்றிய மரபுத்தொடர்கள்

01. காது கொடுத்தல் - அவதானித்தல்

02. காது குத்துதல் - ஏமாற்றுதல்

03. காதில் ஓதுதல் - கோள் சொல்லுதல்

04. காதைக்கடித்தல் - இரகசியம் கூறல்

5.
கால் பற்றிய மரபுத்தொடர்கள்

01. கால் பின்னுதல் - தடைப்படல்

02. கால் பிடித்தல் - காலைப் பற்றிக் கெஞ்சுதல்

03. கால் கொள்ளுதல் - ஆரம்பித்தல்

04. காலைச்சுற்றுதல் - பற்றித் தொடர்தல், தொடர்ந்து பற்றுதல்

05. காலாறுதல் - ஓய்ந்திருத்தல்

06. கால் ஊன்றுதல் - நிலை பெறுதல்

07. காலில் விழுதல் - மன்னிப்பு கேட்டல்

6.
வயிறு பற்றிய மரபுத் தொடர்கள்

01. வயிற்றை கட்டுதல் - செலவைச் சுருக்குதல்

02. வயிற்றிலடித்தல் - சீவனத்தை கெடுத்தல்

03. வயிறு வளர்த்தல் - எவ்வாறோ பிழைத்து கொள்ளுதல்

04. வயிறு கிள்ளுதல்,வயிறு கடித்தல் - பசியுண்டாகுதல்

05. வயிறு குளிர்தல் - திருப்தி அடைதல்

06. வயிறு எரிதல் - பொறாமை கொள்ளுதல்

7.
வாய் பற்றிய மரபுத்தொடர்கள்

01. வாய் விடுதல் - வெளிப்படையாக கேட்டல்

02. வாய் புலம்பல் - பிதற்றுதல்

03. வாய் திறத்தல் - பேசத்தொடங்குதல்

04. வாய்ப்பூட்டுப் போடுதல் - பேசாது தடுத்தல்

05. வாயில் மண் போடுதல் - கேடு விளைவித்தல்

8.
கை பற்றிய மரபுத்தொடர்கள்

01. கை கழுவுதல் - முற்றாய் விலகல்

02. கை கூடல் - அனுகூலமாதல்

03. கையிடல் - ஆரம்பித்தல்

04. கை நீட்டுதல் - அடித்தல்

05. கைபிசைதல் - செய்வதறியாது திகைத்தல்

06. கை தளர்தல் - வறுமையாதல்

07. கை கொடுத்தல் - உதவி செய்தல்

08. கை மிகுதல் - அளவு கடத்தல்

09. கைகலப்பு - சண்டை

10. கையளித்தல் - ஒப்படைத்தல்

9.
செவி பற்றிய மரபுத்தொடர்கள்

01. செவி கொடுத்தல் - கவனித்து கேட்டல்

02. செவிக்கேறுதல் - கேட்பதற்கு இனிமையாக இருத்தல்

10.
தலை பற்றிய மரபுத்தொடர்கள்

01. தலைகாட்டுதல் - வெளிவருதல்

02. தலை கீழாய் நடத்தல் - முறை தவறி நடத்தல்

03. தலைக்கொழுப்பு - தான் என்ற அகந்தை

04. தலைப்பாரம் - தான் என்ற அகந்தை

05. தலை வீக்கம் - தான் என்ற அகந்தை

06. தலைக்கணம் - தான் என்ற அகந்தை

07. தலைகீழாய் நிற்றல் - பிடிவாதம் பிடித்தல்

08. தலைப்படுதல் - மேற்கொள்ளுதல்

09. தலைமறைவு - ஒளிந்திருத்தல்

11.
தோள் பற்றிய மரபுத்தொடர்கள்

01. தோளிலிருந்து செவிகடித்தல் - ஆதரிப்பவரை வஞ்சித்தல்

02. தோள் மாற்றுதல் - பிறர் சுமையை தான் சுமத்தல்

03. தோள் கொடுத்தல் - உதவி செய்தல்

12.
நா பற்றிய மரபுத்தொடர்கள்

01. நாக்கு வளைத்தல் - பழித்தல்

02. நாக்கு நீழுதல் - அடக்கமின்றி பேசுதல்

03. நாக்கு விழுதல் - பேச நாவெழாமல் போதல்

04. நாக்கடைத்தல் - பேச முடியாது இருத்தல்

05. நாக்குத்தவறுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்

06. நாக்குப் புரளுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்

07. நாக்குத்தப்பல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்

13.
பல் பற்றிய மரபுத்தொடர்கள்
01. பல் இழித்தல் - பல்லைக்காட்டி கெஞ்சுதல் , ஏளனம் செய்தல்

02. பல்லைக்கடித்தல் - துன்பம் தருவதை சகித்து கொள்ளல்

03. பல்லைப் பிடுங்குதல் - சக்தியை அடக்குதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent