இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 13.02.2020

வியாழன், 13 பிப்ரவரி, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்



திருக்குறள்

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.


விளக்கம்:

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

பழமொழி

Give and spend and God will send

இட்டார்க்கு இட்ட பலன் 

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.

2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

யார் ஒருவன்  மற்றவர்களைப் பார்த்து  கட்டளையிடுகிறானோ,   அவன்  முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.

   - அரிஸ்டாட்டில்

பொது அறிவு

பிப்ரவரி 13 இன்று உலக வானொலி தினம்.


1.வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் ?

 மார்க்கோனி.

 2. அதிக அளவில் வானொலிகளை தயாரிக்கும் நாடுகள் யாவை?

 ஹாங்காங் மற்றும் அமெரிக்கா.

English words & meanings

 Oncology – study of tumours. புற்று நோய் இயல்.

Occupational - connected to work, தொழில் தொடர்பான

ஆரோக்ய வாழ்வு

அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி ,தொண்டைவலி நீங்கும். சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும் இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

Some important  abbreviations for students

He - Home environment. 

Hs - Hospital

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

நரியும் முட்செடியும்

குறள் :
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

விளக்கம் :
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

கதை :
ஒரு நரியானது செடி, கொடிகள் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமான முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது.

தப்பிக்க முயல்கையில் நரியின் உடம்பெல்லாம் காயம், கீறல் பட்டது. அதனை கண்டு நரி மிகவும் கோபமடைந்தது.

முள்செடியைப் பார்த்து, என்ன செடி நீ, பார் உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா? என்று திட்டியது.


முள்செடி அதற்கு, நண்பா, நான் முள்செடி. என்னை குத்துவதற்குத் தவிர வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை என்றது.

முதலில் தன்னிடம் உள்ள குறையை பார்க்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது.

நீதி :
மற்றவர்களை குறை சொல்லும் முன் தன்னிடம் உள்ள குறையை அறிய வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.02.20

◆பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் தொடர்ந்து கிடைத்து வரும் பழங்கால நாணயங்கள் குறித்து அரசு கலைக் கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஆய்வு செய்து வருகிறார். இங்கு கிடைத்த நாணயங்களில் உருதுமொழி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், சிற்றரசர்களின் அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் உள்ளன.

◆வனஉயிரின பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலம் கூடுதலாக 521.28 ச.கி.மீ.க்கு  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


◆மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்யும் இண்டேன் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

◆இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிப்ரவரி மாதம் 24, 25-ம் தேதிகளில் இந்தியா வர இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது ட்ரம்ப்பின் முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

◆முத்தரப்பு டி20 போட்டி: இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய மகளிர் அணி.

◆ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.

Today's Headlines

🌸 Government art college history professor is reviewing antique coins that will continue to be available in Pennagaram next.  The coins found here have been replaced by linguistic characters.  There are also coins with emblems of the crown.

 🌸The Annamalai Tiger Reserve has been expanded to 521.28 sq.km. for the protection of wildlife and habitat development.

 🌸The company, which sells 30 lakh cylinders daily across India, has made the announcement  that the price of subsidized cylinders will be increased from today.  The company, which sells 30 lakh cylinders daily across India, has made this announcement.

🌸 US President Trump is expected to arrive in India on February 24 and 25, according to the White House report.  It should be noted that this is Trump's first Indian trip.

 🌸Tri-Series T20: Australian women's team beat India and bags the championship title

 🌸The Indian Badminton teams started their journey with a grand victory in the Asian badminton Championship.

Prepared by
Covai women ICT_போதிமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent