கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொரோனா பரவமால் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலார்கள் உட்பட பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் அன்றாட தேவைக்கு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக