இந்த வலைப்பதிவில் தேடு

“5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வந்ததில் தவறில்லை- சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வியாழன், 12 மார்ச், 2020





ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.


இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தான் சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க பொதுத்தேர்வு அவசியம். வேறு வழியே இல்லாமல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தோம் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent