இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக அரசு அதிரடி அரசாணை - அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

வியாழன், 12 மார்ச், 2020



தமிழக அரசு ஊழியர்கள் , ஒரு துறையில் பணியாற்றும்போது அந்த துறைக்கு தேவையான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதி இருந்தால் இரண்டு முதல் மூன்று முன் ஊதிய உயர் வுகள் வழங்கப்பட்டு வந்தது . இதன்மூலம் , சிலர் அரசு துறையில் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளை படித்து கூடுதல் சம்பள உயர்வை பெற்று வந்தனர் . இந்நி லையில் , தமிழக அரசு இதுவரை வழங்கிவந்த கூடுதல் முன் ஊதிய உயர்வை ரத்து செய்வ தாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளி யிட்டுள்ள அரசாணை யில் , " தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் உயர் கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு உடனடி யாக ரத்து செய்யப்படுகிறது ” என்று கூறியுள்ளார்.

 இதன்மூலம் அரசு பணியில் உள்ளவர் கள் கூடுதல் படிப்பை காரணம் காட்டி இனி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent