இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனா பீதி - யார் யாரெல்லாம் மாஸ்க் அணியலாம்

ஞாயிறு, 22 மார்ச், 2020




கொரோனா வைரஸ் அச்சத்தால் எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கியுள்ளது.


இந்நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் கைகளை சோப்பு கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். கூட்டம் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், வேகமாக பரவி வரும் கொரோனாவால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

எனவே, கொரோனா வைரஸ் பரவி வரும் பகுதிகளில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் (முக கவசம்) அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்று பரவலாக மக்களிடையே அச்சம் நிலவுகிறது. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில்கூட பலர் மாஸ்க் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது.


சில இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், எல்லோரும் மாஸ்க் அணியத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் தெளிவான விளக்கப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை. இருமல், காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டாலோ, பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ மாஸ்க் அணிய வேண்டும். சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள் மாஸ்க் அணிய வேண்டும், என கூறப்பட்டுள்ளது. 


இதுதவிர மாஸ்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது விளக்கமாக கூறப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இலவச தொலைபேசி எண்ணையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent