இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்கு விடுமுறை - தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு

திங்கள், 16 மார்ச், 2020



கரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அரசு உத்தரவு சென்னை , மார்ச் 15 ; கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் , அதைப் பயன்படுத்தி பள்ளிக ளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .


அதேவேளையில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயதினரான முதி யோர் , குழந்தைகள் ஆகியோரை எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது . இதை கருத்தில் கொண்டு , கேரளம் , மகா ராஷ்டிரம் , தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது .

அதேபோன்று தமிழகத்திலும் பள்ளிகளுக்கு மார்ச் 31 - ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல் வித்துறை ஆணையர் சிஜிதாமஸ்வைத்தியன் கடந்தவெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார் . இந்தநிலையில் திடீரென இந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது . இது தொடர் பாக முதல்வர் கே . பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத் தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் ( எல்கேஜி , யுகேஜி ) தொடக்கப் பள்ளிகளுக்கும் ( 1ஆம் வகுப்பு முதல் 5 - ஆம் வகுப்பு வரை ) வரும் மார்ச் 31 - ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார் . இதனால் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து கடந்த இரு நாள்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது .


ஆண்டு விழா , சிறப்பு வகுப்புகள் கூடாது :

இந்தநிலையில் , மார்ச் 16 முதல் 31 - ஆம் தேதி வரையிலானவிடுமுறை நாள்களில் தனியார் பள்ளி களில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் , மாணவர் களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

இதைப்பயன்படுத்தி தனியார்பள்ளிகள் ஆண்டுவிழா , விளையாட்டு விழா , சிறப்பு வகுப்புகள் ஆகியவை உள்பட எந்தவொரு நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக் கூடாது . இது தொடர்பாக முறையான அறிவுறுத் தல் அனைத்து மாவட்டக் கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது . உத்தரவை மீறும்பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என உத்தரவிட்டனர் .

ஆசிரியர்கள் பள்ளிக்குவரவேண்டும் :

இதற்கிடையே அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது .


இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் , தமிழகத்தில் கிராமப் புறங்களில் தான் அதிகளவில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன . விடுமுறை குறித்த தகவல் தொலைக்காட்சி , செய்தித்தாள்களில் வெளி யானாலும் மாணவர்களுக்கு எந்தளவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் . இதைக் கருத்தில் கொண்டு , மாணவர்களுக்கு விடுமுறை குறித்து தெரியப்படுத்துவதற் காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேலும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது . இதை படுத்து ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்றனர் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent