இந்த வலைப்பதிவில் தேடு

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வா? தேர்வுத்துறை சுற்றறிக்கையால் பரபரப்பு!

வியாழன், 5 மார்ச், 2020

தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு, கல்வியாளர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பால் பொதுத் தேர்வு முடிவு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதனிடையே அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷா ராணி, மார்ச் 3ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்க இருப்பதாகவும், அதற்கு தேர்வு மையங்களின் பட்டியலை தயார் செய்யும்படியும் ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்களை நியமனம் செய்து அந்த பட்டியலை மார்ச் 13க்குள் சென்னைக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார். 


இந்த குளறுபடி குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு முகநூலில் பதிவிட்டிருந்தார்.இரவோடு இரவாக அவருக்கு போன் செய்து பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தனித் தேர்வுதான் பொதுத் தேர்வு என தவறுதலாக அறிவிப்பு வந்து விட்டதாக மழுப்பியுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent