இந்த வலைப்பதிவில் தேடு

யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது தெரியுமா?

ஞாயிறு, 8 மார்ச், 2020



பிடிக்குதோ இல்லையோ, மற்றவர்களிடம் பெருமைக்காக சொல்வதற்காகவே சிலர் கிரீன் டீயை குடிப்பதுண்டு. யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

கிரீன் டீ குடிப்பது எல்லாருக்கும் இப்போது கௌரவ விஷயமாக நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறோம். பிடிக்குதோ இல்லையோ, மற்றவர்களிடம் பெருமைக்காக சொல்வதற்காகவே சிலர் குடிப்பதுண்டு.

ஆனால் குடித்த பின் சிலருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல் அல்லது வேறு பாதிப்பு உண்டாகலாம். கிரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சந்தேகமில்லை. உடலுக்கு நல்லதுதான்
ஆனால் எல்லாரும் இதனை குடிக்கக் கூடாது. வெகுசிலருக்கு இதனால் பிரச்சனைகளும் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என்பதை கீழே பார்க்கலாம்.

நீங்கள் உங்கள் நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்பவரா? அப்படியென்றால் நீங்கள் கிரீன் டீ எடுப்பது உசித்தமல்ல. ஏனென்றால் கிரீன் டீ மருந்துகளுடன் வினைபுரிந்து எதிர்வினையை தரும். இது ஆபத்தானது.

உடல் எடையை குறைக்க அந்த டயட், இந்த டயட் என குறிப்பிட்ட வகையறா டயட்டுகளை பின்பற்றுபவரா? அல்லது சத்து மாத்திரைகளை சாப்பிடுபவரா? டயட்டுகளால் உங்கள் ரத்தத்தின் அடர்த்தி குறைந்திருக்கும். அந்த சமயத்தில் கிரீன் டீ குடிப்பதால் இன்னும் அதிக அடர்த்தி குறைந்து பல பிரச்சனைகளை தரும்.

மாதவிடாய் காலத்தில் கிரீன் டீ சில பெண்களுக்கு ஒவ்வாமை உண்டாகும். எனவே அந்த மாதிரியான சமயங்களில் கிரீன் டீ தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள காஃபின் அலர்ஜியை உண்டாக்கலாம்.

சிலருக்கு காஃபின் ஒவ்வாமை இருக்கும். கிரீன் டீ யில் குறைந்த அளவே காஃபின் இருந்தாலும் இரண்டு முறைக்கும் அதிகமாக குடிக்கும்போது டென்ஷன், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை ஆகியவை உண்டாகும்.

கிரீன் டீ யில் இருக்கும் அனைத்து சத்துக்களும் பழச்சாறுகளில் உள்ளன. அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகளுடன் கூடிய பழச்சாறுகளை நீங்கள் கிரீன் டீக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.

பக்கவாதம் அல்லது இதய நோய் உண்டானவர்கள் தினமும் பெர்ரி பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஓட்ஸ் மற்றும் பெர்ரி பழங்களில் அதிக நார்சத்தும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் இருப்பதால் அவை சிறந்த பலனளிக்கும். கிரீன் டீ க்கு பதிலாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு புத்துணர்ச்சி தரும்வகையில் இருக்க வேண்டுமென நினைத்தால், இஞ்சி தேநீர், சீமை சாமந்தி தேநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் கிரீன் டீக்கு இணையான சத்துக்கள் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent