#வியர்வை அதிகமாக சுரப்பவர்களுக்கும்,
#வெயிலில் நடப்பதாலும்...தலையில்ந வியர்வை துளிகள் ( வியர்வை உப்பு தண்ணீராக இருப்பதை பார்த்திருப்போம்) இருப்பதை உணரலாம்.
இவை குளிர்ந்து காயந்து ஒரே மட்டமாக layer ஆக இருக்கும்.
எப்பொழுது தலை வாரவோ,சொரியவோ செய்கிறீர்களோ...அப்பொழுது அவை உடைந்து செதில் செதிலாக பிரியும்.இவையே பொடுகு....
மேலும் தோல் வியாதிகளாலும் பொடுகுகள் இருக்கும்
யாருக்கெல்லாம் பொடுகு வரும்?
உடல் உஷ்ணம் உள்ளவர்கள். தலையில் வியர்வைச் சுரக்கிறவர்கள்...பொதுவாக வெயிலில் நடந்தாலே தலை வியர்க்கும்.
பொடுகு வராமலிருக்க என்ன செய்யலாம்?
* தலையை குளிர்ச்சி யாக வைக்க வேண்டும். ( தினமும் குளிப்பது என்பது தூய்மை படுத்த அல்ல...குளித்தலுக்கு குளிர்வித்தல் என்று அர்த்தம்.
*குளிக்கும் பொழுது முதலில் உடலை குளிர்வித்தல் முறையில் காலில் இருந்து தண்ணீர் ஊற்றி உடலை குளிர்விக்க வேண்டும். பின்னரே தூய்மை படுத்துதல் வேண்டும்.
*வியர்வை தலையில் தங்கவிடாமல் துணிகளால் துடைத்துக் கொள்ளுதல்.
வியர்காதவாறு காட்டன் துணிகளை தலையில் கட்டிக்கொள்ளலாம்...
*நம்முன்னோர் வெண்மை கட்டன் துணிகளால் ஆன முன்டாசுகளை கட்டுவதன் மூலம் தலையை சூரிய வெப்பத்திலிருந்து தலையை காத்துக்கொண்டணர். வேலை முடிந்ததும் முகம் கழுவி துண்டை தண்ணீரில் நனைத்து உடல் வியர்வைகளை துடைத்து அலசி தலையும் துவட்டி குளிர்விப்பர்...இன்னமும் கிராமங்களில் உண்டு....
வெண்மை சூரிய ஒளியை,வெப்பத்தை ஊடுருவ செய்யாது.
குளிக்கும் முறையை சரி செய்தல்:
வாய்நிறைய தண்ணீரை நிரப்பி முதலில் சிறிது தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு தண்ணீர் மொண்டு கால் ,இடுப்புக்கு கீழ், முதுகு, முகம், காது என ஊற்றி குளிர்வித்துவிட்டு தண்ணீரை துப்பிவிட்டு, வாயில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு மீண்டும் தலையில் தண்ணீரை ஊற்றி குளிர்விக்க வேண்டும்.. குளித்து முடித்து பின்னர் நீரை துப்பவும்.
மேலும் வெந்தையம் கலந்த தண்ணீர்.
மோரில் கற்றாலை போட்டு குடியுங்கள்.
நல்லெண்ணெய் வாரம் இரண்டு முறை தலைமுதல் தொப்புள் பாதம் வரை விட்டு அடிக்கவும் அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.
உடல் உஷ்ணம் ஏறக்கூடய உணவுகளை குறைத்து அளவாய் உண்ணுதல்...
இவை அனைத்தும் வெயில் காலங்களில்...
மழை காலங்களில் சிறிது மாற்று செய்து...உடல் வெப்பத்தை சம நிலையில் வைக்க ....பொடுகு,மேலும் வயிறு சம்பந்தமான விசயங்கள் சரியாகும்
பொடுகினால் தலைக்கு தேய்கும் எண்ணெய் ... முடி வேர்களுக்கு செல்வதை தடை செய்வதால் முடி வரண்டு உடைவதும் வேர் உறுதி தன்மையை இழக்கவும் செய்கிறது.
தலையின் வெப்பநிலையை சமன் செய்து வைக்க:
தலைக்கு எண்ணெய் தேய்பதை கால பருவநிலைக்கேற்ப நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றை மாற்றி மாற்றியும், கலந்தும் உபயோகிக்க வேண்டும்...
* ஏப்ரல்,மே மாதங்களில் வெயில் மிக மிக அதிகமாக இருப்பதால் தலைக்கு விளக்கெண்ணெய் ஐ மட்டுமே தடவுங்கள்...
* சூன்,சூலை, பிப்பரவரி,மார்ச்ச் ஆகிய மாதங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் நல்லெண்ணெய்+ விளக்கெண்ணெய் ஐ சம அளவு கலந்து தலையில் தினமும் தேய்க்கவும்.
* ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபரில்மிதமாக வெயில் இருப்பதால் வெறும் நல்லெண்ணெய் ஐ தலைக்கு தடவ்வும்.
* நவம்பர்,டிசம்பர்,சனவரியில் குளிர்காலம் என்பதால் தேங்காய் எண்ணெய் ஐ மட்டுமே தலைக்கு தடவவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக