இந்த வலைப்பதிவில் தேடு

1-9 வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பட்டியல் தயாரிக்க இயக்குனர் உத்தரவு

வியாழன், 30 ஏப்ரல், 2020






இந்த கல்வி ஆண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல் முறையில் தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உரிய அறிவுரைகள் வழங்கவும் தெரிவிக்கப்பட்டது.




இதை அடிப்படையாக கொண்டு தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும், நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் தேர்ச்சி பட்டியலில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent