இந்த வலைப்பதிவில் தேடு

தம் மாணவர்களின் வீடு தேடி சென்று உதவிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020



அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை மட்டுமல்ல தங்கள் பணிபுரியும் இடத்தில் உள்ள மக்களையும் நேசிக்க கூடியவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன கம்மியம் பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக       திருமதி சித்ரா முருகன் மற்றும் ஆசிரியராக திருமதி உஷா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர் இப்பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர்



தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வேலைக்கு செல்லாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளனர் அரசுப்பள்ளிகளை காக்க வேண்டும் என்றும் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட CEOதிரு குணசேகரன் திருப்பத்தூர் மாவட்ட DEO திருமதி மணிமேகலை சோலையார்பேட்டை BEO திருமதி கோமதி மற்றும்                      

திரு கமலநாதன் ஆகியோர் அறிவுரையின்படி இன்று 25 4 2020 சனிக்கிழமை முற்பகல் பதினோரு மணிக்கு சின்ன கம்மியம் பட்டு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மளிகை பொருட்கள் மஞ்சள்  ரவை கோதுமை மைதா  சர்க்கரை  சேமியா  பிஸ்கட்ஸ் காய்கறி தொகுப்பு முதலியவற்றினை வழங்க தலைமை ஆசிரியர்             திருமதி சித்ரா முருகன் ஏற்பாடு செய்தார்  மற்றும் சின்ன கம்மியம் பட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆறு நபருக்கு நிவாரண பொருட்கள் வழங்கவும்  ஏற்பாடு செய்தார்



இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்                 திரு பிரேம்குமார் வட்டார கல்வி அலுவலர்           திருமதி கோமதி அலுவலக உதவியாளர்            திரு ஆனந்தகுமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு கிருஷ்ணமூர்த்தி திரு தாமோதரன்    திரு குமரேசன்




முன்னாள் ராணுவ வீரர்                           திரு புருஷோத்தமன்& 
திரு  தியாகராஜன்  மற்றும் ஊராட்சி மன்ற செயலர் திருமதி அறிவு செல்வி ஆகியோர் நிவாரண பொருட்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கினார்கள் வருகை புரிந்த அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது அரசு அறிவித்த படி சமூக விலகலை கடைபிடித்து பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது மேலும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொரானா வைரஸ் விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறப்பட்டது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent