Posted By Pallikalvi Tn
வகுப்பறைச் சூழல் ஒவ்வொரு நாளும் புதிர் பொதிந்த ஒன்றாகும். ஒரே பாடப் பொருள் வெவ்வேறு மாணாக்கர்களிடம் வெவ்வேறு பிரதிபலிப்பைத் தரும். புதிய புதிய வினாக்கள் மாணாக்கர்களிடமிருந்து எழும்போது, புதிய புதிய கருத்துக்கள் ஆசிரியருக்கு கிடைக்கும்.
அதே நேரத்தில் பாடப்பொருள் மாணாக்கர்களிடம் சேரும் விதத்தில் பலதரப்பட்ட சிக்கல்கள் எழும். ஆசிரியர் சிக்கல்களை அதன் தன்மைகளைக் கொண்டு பகுத்தறிந்து தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை ஆராய்ந்து உடனுக்குடன் அச்சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண முற்படுகையில் ஆசிரியர் ஒரு செயல் ஆய்வாளராக செயல்படுகிறார்.
“வகுப்பறையிலோ, பள்ளிச் சூழலிலோ அவ்வப்போது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு முடிவு காண ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ எடுத்துக் கொள்ளும் முறையான விஞ்ஞான அடிப்படையிலான செயல்முறை செயலாய்வு என்பதாகும்”
அரசின் கல்வித் திட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உறுதி செய்வதற்காக இந்தியாவில் அவ்வப்போது பல்வேறு கல்வித் திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. கல்வித்திட்டங்கள் யாவும் மாணாக்கர்களை மையமாக வைத்தே தீட்டப்பட்டுள்ளன.
அரசுக் கல்வித் திட்டங்களும் நலத்திட்டங்களும் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் மாணாக்கர்களைச் சரிவரச் சென்றடைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியர்கள் உதவ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக