Posted By Pallikalvi Tn
அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது. முறைசார்க் கல்வியும், எழுத்தறிவுக் கல்வியும் பரவலாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் பள்ளியில் கல்வி பயிலாமல் குழந்தை உழைப்புக்குச் செல்லும் குழந்தைகளும் நம்மிடையே உள்ளனர். பள்ளியில் இன்னமும் சேர்க்கப்படாத பெண் குழந்தைகளும் இருக்கவே செய்கின்றனர்.
ஆசிரியர் சமூக மாற்றத்தை நன்கு திட்டமிட்டு வழிநடத்த தெரிந்து வைத்திருக்க வேண்டும். இன்றைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கனுப்பும் பெற்றோர்களின் மனப்பான்மையை மாற்றி வேலைக்குச் செல்லும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு செய்ய வேண்டும்.
படிப்பை இடையில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கு அரசின் கல்வி நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மீண்டும் படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு சுய வேலை வாய்ப்புத் திட்டம் பற்றிக் கூறி, அதன் மூலம் பயனுறுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு ஆசிரியர் ஒரு முகவராக இருந்து செயலாற்றி சமூகமாற்றத்துக்கு உதவ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக