இந்த வலைப்பதிவில் தேடு

ஊரடங்கு உத்தரவு வழக்கில் சிக்கினால் அரசு வேலை 'காலி' ஐ.ஜி., அமல்ராஜ் எச்சரிக்கை

வியாழன், 16 ஏப்ரல், 2020



'ஊரடங்கு உத்தரவின் போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள், வேலைக்கு செல்ல முடியாது' என, திருச்சி, மத்திய மண்டல, ஐ.ஜி., அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் மே, 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி, வெளியில் வருவார் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மத்திய மண்டலத்தில், தடை உத்தரவை மீறியதாக, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து, மத்திய மண்டல, ஐ.ஜி., அமல்ராஜ் கூறியதாவது:அரசின் தடை உத்தரவை மதிக்காமல் செயல்படுபவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம், கொள்ளை நோய் தடுப்பு சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.


வழக்கு முடியும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் அரசு பணியில் இருந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், வேலைக்குச் செல்ல முடியாது.பாஸ்போர்ட் போன்ற வெளிநாடு செல்வதற்கான ஆவணங்களையும் பெற முடியாது. கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்காக வெளிநாடு செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட மாட்டாது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோராக இருந்தால், வழக்கு முடிந்து, அதற்கான அறிக்கை பெற்ற பிறகே, வேலையில் சேர முடியும். எனவே, அத்தியாவசிய தேவை இல்லாமல், வெளியே சுற்றித் திரிவதை தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent