இந்த வலைப்பதிவில் தேடு

ஊதியம் இழுபறி ; ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவதி

வியாழன், 16 ஏப்ரல், 2020



வங்கிகள் இணைப்பு காரணமாக, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, நாடு முழுவதும், நிதித்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டது.

இதன்படி, நஷ்டத்தில் இயங்கிய மற்றும் குறைந்த லாபம், அதிக செலவுடன் இயங்கிய வங்கிகள், மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்டன.சில லாபம் குறைந்த வங்கிகள், அதிக லாபத்துடன் இயங்கிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. 

இந்த வகையில், 10 வங்கிகளின் இணைப்பு, ஏப்.,1ல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மார்ச் மாத சம்பளம் இன்னும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில், சம்பள கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, உரிய காலத்தில் சம்பளம் கிடைத்துள்ளது.

தற்போது இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வங்கிகளில், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இ.சி.எஸ்., மின்னணு பரிமாற்ற முறையில், சம்பளத்தை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால், பல மாவட்டங்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பள பாக்கி உள்ளது.இதுகுறித்து, கருவூலத்துறையில் இருந்து, வங்கிகளிடம் பேசியுள்ளதாகவும், இரண்டு நாட்களில் பிரச்னை தீர்க்கப்பட்டு, சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், வங்கிகள் உறுதி அளித்துள்ளதாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent