எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லக் காரணம் அவை சமூக கட்டமைப்புள்ள உயிரினங்கள்; தேனீக்களைப் போல. முன்னால் செல்லும் எறும்பினைப் பின்தொடர்ந்து ஏனையவை பின் செல்கின்றன.
முன்னால் செல்லும் எறும்பை ஏன் பின் தொடர வேண்டும்? பின் தொடரவேண்டும் என அவற்றிற்கு கூறுவது யார்?
நமக்கு ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்றால் சொற்களைக் கோர்த்து பேச்சு மூலமாக நமது விருப்பம் அல்லது தேவையைக் கூறுகிறோம். அதே போலத்தான் அவற்றுள் பேசிக்கொள்ள பெரமோன்களைப் பயன்படுத்துகின்றன.
இந்த பெரமோன்கள் வழியாக செய்தி பரிமாற்றம் செய்து கொள்கின்றன. அதனால் தான் முன்னால் செல்லும் எறும்பு வெளியிடும் பெரமோன் கூறும் செய்தி அறிந்து அதற்கு பின் வரும் எறும்பும், அது வெளியிடும் பெரமோன் மூலம் அதற்கு பின் வரும் எறும்புமாக பின் தொடர்ந்து செல்கின்றன.
இதனை அறிய ஒரு சிறிய முயற்சியாக எறும்புகள் நேர்க்கோட்டில் செல்லும் போது ஒரு தடையை ஏற்படுத்தினால் பின்னால் வரும் மீதமுள்ள எறும்புகள் சற்று தடுமாறும்.
அதான் பெரமோன் இன்னும் இருக்குதுல்ல. அத முகர்ந்து பாத்து சரியான பாதைல போக வேண்டியதுதான?
இந்த சந்தேகம் தான் அப்போது எல்லாருக்கும் இருந்தது. ஆனால் பின்னர் தான் பெரமோன்கள் பற்றி விளக்கமான ஆராய்ச்சி மேற்கொண்டு சில விடயங்களைக் கண்டறிந்தனர். இந்த பெரமோன்கள் ஆவியாகும் தன்மை கொண்டதாக இருப்பது தான் பிரச்சனையே.
பெரமோன்கள்: (Pheromones)
பெரமோன்கள் என்பது வேதியியல் சமிக்ஞைகளாகும். இவை ஒரே இனத்தின் உறுப்பினர்களிடையே தொடர்பு கொள்ளப் பயன்படுகின்றன.
பெரோமோன்கள் ஹார்மோன்களைப் போலவே இருக்கின்றன. ஆனால் உடலுக்கு வெளியே வேலை செய்கின்றன.
பாலியல் தூண்டுதல் செயல்பாட்டைத் தூண்டுகின்றன.
பெரும்பாலான பூச்சிகள் தொடர்பு கொள்ள பெரோமோன்களைப் பயன்படுத்துகின்றன.
இந்த பெரமோன்களில் உயிரியல் கடிகாரத்தை இயக்கும் பெரமோன்கள், உணவுப்பாதை பெரமோன்கள், நடத்தைப் பெரமோன்கள் மற்றும் இனப்பெருக்க செயல்பாட்டு பெரமோன்கள் என ஏராளமாக உள்ளன.
சமூக பூச்சிகளில் பெரமோன்கள் பரிணாம வளர்ச்சியின் மிக அற்புதமான எடுத்துக்காட்டுகளை வழங்கியுள்ளன. (தேனீக்கள், குளவிகள் மற்றும் எறும்புகள் போன்ற சமூக பூச்சிகளின் தகவல் தொடர்பிற்கு பேரமொண்கள் பயன்படுகின்றன..
உலகில் 12,000 இற்கு மேற்பட்ட எறும்பு இனங்கள் வாழ்கின்றன. எல்லா எறும்பு இனங்களுமே கூட்டாக வாழ்பவை.
ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிப்பதற்கு முன்னிருந்தே இந்த சிறிய மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
எல்லா எறும்பு இனங்களிலும் ஒவ்வொரு குழுக்களிலும் ஒரு ராணி எறும்பு இருக்கும். அவருக்கு கீழ் படைவீரக்ள, தொழிலாளர்கள், கட்டடக்கலைஞர்கள், உணவு சேகரிப்போர் என பல மட்டங்களில் எறும்புகள் இருக்கும். இவர்களுக்கு தலைமை தாங்க ஒரு தலைவரும் இருப்பார்.
பல சாகசக் கதைகளில் வரும் சிறுவர்கள் காடுகளிற்கு பிரயாணம் செய்யும் பொழுது தாம் வழிமாறி சென்றுவிடாதிருப்பதற்காக உணவுப்பொருட்கள், கற்கள், மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றை பாதையில் போட்டு செல்வர். ஒருவர் அவ்வாறு போட்டு செல்லும் பொழுது மற்றவர்கள் அவரை பின்தொடர்வார்கள்.
இதையேதான் எறும்புகளும் செய்கின்றன. தமது வாழிடத்திற்கான பாதையை அடையாளம் கண்டுகொள்ளவும், தமது தலைவரை பின்பற்றவும் இவ்வாறு வரிசையாக செல்கின்றன.
தலைவர் எறும்பு அல்லது முதலில் செல்லும் எறும்பு Pheromone என்ற ஒரு இரசாயனத்தை தனது பாதையில் விட்டுச்செல்வார். மற்றவர்கள் அந்த இரசாயனத்தை முகர்ந்து பின்தொடர்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக