இந்த வலைப்பதிவில் தேடு

​ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வது ஏன்?

புதன், 15 ஏப்ரல், 2020




💰 கல்யாணம், காது குத்து, கிடா வெட்டு போன்ற சுப நிகழ்ச்சியின் போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்?

💰 ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

💰 அந்தக்காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் வடிவத்தில் தான் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களாக இருந்தன.


💰 அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு இருந்தது. ஆனால் நோட்டுக்கள் என்கிற ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. நோட்டு தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.

💰 எனவே ரூபாய் தாளை மொய்ப்பணமாக கொடுப்பவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்ப்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.


💰 அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்து வந்தன. எனவே தான் நாம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐந்நூற்றியொன்று இரண்டாயிரத்து ஒன்று என வழிமுறை தொடரப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent