Posted By Pallikalvi Tn
அரசு அலுவலகங்கள் மே3ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 33% ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல 100 நாள் வேலை திட்டத்திற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது. அரசு வங்கிகள், பால். காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும் இந்த காலத்தில் இயங்கி வருகின்றன. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார்.
மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு 30வது நாளாக அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு நாட்டில் குறையாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல கடந்த ஏப்.20ம் தேதியில் சில ஊரடங்கு தளர்வுகளும் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தளர்வுகள் தமிழகத்தில் அமைப்படுத்தப்படாது எனவும், மே 3ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்பிறகு, மே 4ம் தேதியில் இருந்து பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல இன்று, கொரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 35% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் மே 3ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல மருத்துவம் சார்ந்த கட்டுமான பணிகளும், நீர் மேலாண்மை கட்டுமான பணிகளும், சாலை அமைப்பு பணிகள் ஆகியவற்றை இயக்கலாம் என நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், பணிக்கு வரும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக