இந்த வலைப்பதிவில் தேடு

கலர் கலரா மைல் கற்கள் - சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?

வியாழன், 30 ஏப்ரல், 2020




பஸ்சில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து செல்லும் போது, நம்மை கடந்து செல்லும் மைல் கல்லை பார்த்திருப்போம். அதில் ஊரின் பெயரையும், தூரத்தையும் படிப்போம். ஆனால் நம்மில் எத்தனை பேர், அந்த மைல் கல்லின் மேல் உள்ள நிறம் எதைக்குறிக்கிறது, என்பதை அறிந்துள்ளோம்.



மைல் கல்லில் உள்ள நிறத்தின் பின்னணி அறிந்து கொள்ள முற்பட்டபோது, ரோடு என்று அழைக்கப்படும் சொல்லில், மக்களுக்கு பயன்படும் பல விஷயங்கள் தெரிய வந்தன. புதிதாக ஒரு பகுதிக்குச்செல்லும் போது, நாம் எந்த ரோட்டின் வழியாக செல்கிறோம், சரியான பாதையில் செல்கிறோமா என தெரிந்து கொள்ள மைல்கல்கள் உதவுகின்றன. 

வெளி மாநிலத்தவர்களுக்கு மைல் கல்லில் உள்ள ஊரின் விபரங்கள் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், மைல்கல்லில் உள்ள நிறங்களை வைத்து, நாம் எந்த ரோட்டில் பயணம் செய்து கொண்டு உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதனால் வழி தெரியாமல் திசை மாறி போவதை தடுக்கலாம்.

மேலும் ரோடு பழுதடைந்தால், எந்த ரோடு யார் கட்டுப்பாட்டில் வருகிறது, எந்த அதிகாரியிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

என்.எச் 

மைல் கல்லின் மேல் உள்ள மஞ்சள் நிறம் தேசிய நெடுஞ்சாலையை குறிக்கிறது. இது மாநிலங்களின் வழியாக செல்லும் அதிக போக்குவரத்து உள்ள மிக முக்கிய சாலையாகும். கனரக வாகனங்கள் செல்லும் தரத்தில் ரோடு அமைக்கப்பட்டு இருக்கும். இந்த ரோட்டின் பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளும்.


எஸ்.எச்

மைல் கல்லின் மேல் உள்ள பச்சை நிறம்,மாநில நெடுஞ்சாலையை குறிக்கிறது. மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இதுவும் கனரக வாகனங்கள் செல்லும் தரத்தில் இருக்கும். இந்த ரோட்டின் பராமரிப்பு மாநில நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளும்.

எம்.டீ.ஆர்

மைல் கல்லின் மேல் உள்ள நீல நிறம், மாவட்ட சாலையை குறிக்கிறது. இது மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையாகும். இது ஒரு மாவட்டத்தில் முக்கிய நகரங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் சாலையாகும்.


ஓ.டீ.ஆர்

மைல் கல்லின் மேல் உள்ள இளஞ்சிகப்பு (பிங்க்) நிறம் மாவட்ட இதரச்சாலைகளை குறிக்கிறது. இது கிராமங்களை நகரச்சாலைகளோடு இணைக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent