பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் , துணை தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தரவும் உத்தரவு.
கொரோனா தொற்று நோய் தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர் , கழிப்பறை . கட்டிட ஸ்திர தன்மை Parking மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதை ஊர்ஜிதம் செய்து , பேரிடர் மேலாண்மை முகாம்கள் பள்ளிகளில் இயக்க தயார் நிலையில் இருக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பள்ளிகளில் முகாம்கள் அமைப்பது தொடர்பாக உயர் அலுவலர்கள் பார்வையிட வருவதால் இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியர் / துணை தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் தவறாமல் இருப்பதுடன் , பார்வையிட வரும் உயர் அலுவலர்களுக்கு தக்க விவரங்களை தெரிவிக்கவும் அறிவுரைகள் வழங்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக