Posted By Pallikalvi Tn
ஆசிரியர்கள் குழந்தைகளின் மூன்றாவது பெற்றோர். அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் ஆசிரியரிடம் தான் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் அவ்வெதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தர வேண்டும். குழந்தைகள் ஒருநாளின் பெரும்பகுதியை ஆசிரியருடன் தான் கழிக்கின்றனர். பள்ளி, மாணாக்கருக்கு இப்பருவம் சமூதாய வாழ்வின் ஆரம்பம் என்பதால், பாடப்பொருள் தவிர பிற கற்றுக் கொள்ள வேண்டியவைகளும் அதிகம் உள்ளன.
மாணக்கர்களின் திறமைகள் வளர்க்கப்பட வேண்டியிருப்பதால் ஆசிரியர் அவர்களைப் பற்றிய அக்கறை மிகவும் கொண்டவராகவும், அவர்களிடம் பரிவுணர்வு கொண்டவராகவும் இருத்தல் அவசியமாகும். பரிவும் ஒத்துணர்வும் ஆசிரியரின் வெற்றிக்கு வகை செய்யவல்லவைகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக