இந்த வலைப்பதிவில் தேடு

Hair Dye : இயற்கை மற்றும் செயற்கை கூந்தல் சாய முறைகள்

புதன், 10 ஜூன், 2020




கூந்தல் சாயத்தில் , அதிக அளவில் நச்சு பொருட்கள் இருக்கிறது என்று அறிவோம்! அவற்றுள் முக்கியமான மூன்று நச்சு பொருட்களை இப்பொழுது பார்க்கலாம்..




1)PPD ( p-Phenylenediamine) – இந்த வேதியல் பொருள் , தலை முடிக்கு , செயற்கை நிறத்தை கொடுக்க வல்லது. சுருங்க கூறின் , இது ஒரு சாயம். இந்த சாயம் உபயோகம் செய்த குறுகிய காலத்துக்குள்ளேயே , ஒவ்வாமை , கண் எரிச்சல் , ஆஸ்துமா ,இரைப்பை அழற்சி ,சிறுநீரகச் செயலிழப்பு , தலை சுற்றல் , வலிப்பு , கோமா போன்றவை ஏற்படும்! அதிக காலம் உபயோகம் செய்யும் போது , கல்லீரல் பாதிப்பு , சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது உறுதி !



2)அனிலின் சாயம்- இந்த வேதியல் பொருள் , கண் , தோல் , மூக்கில் எரிச்சல் உண்டாக்குபவை.. அதிகப்படியான உபயோகம் செய்யப்படும் போது, கண் குருடாகும் வாய்ப்புகள் அதிகம்.





3)4-ABP – இந்த வேதியல் பொருள் , புற்று நோய் உண்டாக்க கூடிய ஒரு காரணி.

இந்த மூன்று தவிர , கணக்கில் அடங்காத பல நச்சு பொருட்கள் , தலை முடிக்கு அடிக்கப்படும் சாயங்களில் நிறைந்து இருக்கின்றன!

கூந்தல் சாயத்தில் சேர்க்கப்படும் முக்கியமான  மூன்று சாயங்களை கண்டு அறிந்தோம்.இனி உடலுக்கு அதிகளவு சேதம் இல்லாது , தலை முடிக்கு சாயம் இடுவது எவ்வாறு என்று கண்டு அறியலாம்!

1)எப்போதாவது ஒரு முறை , மிக முக்கியமான விசேஷங்களின் போது மட்டும் தலைமுடிக்கு சாயம் ஏற்றி கொள்ளலாம்..இதனால் , அதனுள் இருக்கும் , நச்சு பொருட்களின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்ளலாம்.



2)தலை முடிக்கு சாயம் ஏற்றும் முயற்சியில் , தலையின் மேற்பகுதியை தவிர்த்து சாயம் போடுவது நலம்! இல்லையேல் , சாயம் , தோலால் உறிஞ்சப்பட்டு , நம் உடம்பில் ஓடும் குருதியொடு , நச்சு பொருட்கள்  கலந்து விடும்.

3)தலை முடிக்கு சாயம் ஏற்றும் போது , கைகளை பாதுகாப்பதற்கு ,  நல்ல ஒரு கையுறை(Glouse) மாட்டி கொள்வது , மிகவும் அவசியம்!



4)தலை முடிக்கு நிரந்தரமில்லாத சாயம் போடுவது  ஓரளவு நன்மை பயக்கும்! நிரந்தரமில்லா சாயம் போடும் போது , புறத்தோல் தளர்த்தப்படுவதில்லை! சாயம் ஆனது புறத்தோலின் மேலேயே அடிக்கப்படும்.. மூன்று , நான்கு தடவை , ஷாம்பூ போட்டு நன்கு தலையை அலசி விடும் போது , சாயம் கரைந்து ஓடி விடும்.. திரும்ப புதிதாக , கூந்தலுக்கு சாயம் இட்டு கொள்ள வேண்டியது தான்!



செயற்கை கூந்தல் சாயங்களில் நச்சு பொருட்கள் அதிகம் என்று பார்த்தோம்.. இனி இயற்கையில் கிடைக்க பெரும் கூந்தல் சாயங்களை ஒரு நோட்டம் விட்டு விடுவோம்…



1)மருதாணி



இதை அறியாதவர்கள் யாரும் இல்லை! இதை தண்ணீர் விட்டு மையாய் அரைத்து , கூந்தலில் சாயம் இட்டு கொள்ளலாம் .. இல்லையேல் , தேநீர் போன்று , தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க விட்டு , பின் சக்கையை வடிகட்டி , சாய நீரை , கூந்தலுக்கு நிறம் கொடுக்க பயன் படுத்தி கொள்ளலாம்! அவ்வாறு சாயம் இட்ட கூந்தலை , வெயிலில் ஒரு அரை மணி போல உலர்த்தும் போது ,அழகான நிறம் பெறுவது மட்டுமல்லாமல் , கூந்தலுக்கு ஒரு இயற்கை பளபளப்பும் கிடைக்கும்! பக்க விளைவுகள் எதுவும் கிடையாது!


2) காய்ந்த செம்பருத்தி பூக்களை , பவுடர் ஆக்கி , தண்ணீர் விட்டு மையாய் குழைத்தும் , கூந்தலுக்கு சாயம் இடலாம் !




பறித்து காய வைத்த செம்பருத்தி பூக்களை போட்டு தேநீர் தயாரித்தும் , இயற்கையான கூந்தல் சாயம் பெறலாம்.. அவ்வாறு தயாரிக்க படும் , சாய தேநீரை , கூந்தலுக்கு இடுவதற்கு முன்னே , நன்கு ஆறி , குளுமையாக இருக்க வேண்டியது , மிகவும் அவசியம் !





3) தண்ணீர் சேர்த்து அரைக்கப்பட்ட பீட்ரூட் , கூந்தலுக்கு அழகான நிறத்தை கொடுக்கவல்லது!





இது போன்ற இயற்கையில் கிடைக்கும் பொருளை கொண்டு, கூந்தலுக்கு சாயம் ஏற்றும் போது , நிரந்தரமில்லா சாயம் மட்டுமே கிடைக்க பெரும் .. மாதத்திற்கு ஒரு முறையோ , இரு முறையோ , கூந்தலுக்கு திரும்பவும் சாயம் இட்டு கொள்ள வேண்டியது தான் ! ஆனால் , கூந்தல் பாதுகாப்பாக இருக்க போவது உறுதி ! மேலும் , கூந்தல் , எண்ணெய் பசை இல்லாது , உலர்ந்து , உடைந்து , ஒன்றும் இல்லாது போய் விடுமோ என்ற அச்சம் இல்லாது நிம்மதியாய் இருக்கலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent