இந்த வலைப்பதிவில் தேடு

மே.3- ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல்

சனி, 2 மே, 2020




மே.3 ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் வல்லுனர் குழு சமர்பித்தது.



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள  தேசிய ஊரடங்கு, அதற்கு பிறகும்  நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா? என்பது பற்றி இன்னும் மத்திய மாநில அரசுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 



இந்த நிலையில், மே 3 ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய இடைக்கால அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நிதித்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு இடைக்கால அறிக்கையை  முதல்வரிடம் தாக்கல் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent