இந்த அப்பிளிக்கேஷனில் உள்ள ஆபத்துக்களை எடுத்துக்கூறியும் பலர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் சில நாடுகள் குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன.
இந்நிலையில் Zoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக புதிய வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்வதற்கு பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன.
இப்படியிருக்கையில் பேஸ்புக் நிறுவனம் Messenger Room எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் 50 நபர்கள் வரை ஒரு நேரத்தில் வீடியோ அழைப்பில் ஒன்றாக இணைய முடியும்.
இந்த வசதியானது இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக