இச் செயலியை நாள்தோறும் சுாமார் 200 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச் செயலி தொடர்பாக பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்த வரிசையில் மேலும் ஒரு பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் 3 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் முதலாவது Zoom Account எனும் Subject உடன் தகவல்களை திருடக்கூடிய இணைப்பினைக் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது.
இரண்டாவதாக Missed Zoom Meeting எனும் Subject உடன் அனுப்பப்படும் மின்னஞ்சலிலும் தகவல் திருட்டு இணைப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி Meeting Cancelled - Could we do a Zoom call எனும் Subject உடனும் நிறுவனத்தின் பெயர்களையும் உள்ளடக்கி இவ்வாறான மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்ற மின்னஞ்சல்கள் ஏனைய பயனர்களுக்கும் அனுப்பப்படலாம் என முன் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக