இந்த வலைப்பதிவில் தேடு

விநாயகருக்கு ஏன் ஒற்றைக்கொம்பு உடைந்து உள்ளது தெரியுமா

புதன், 31 ஆகஸ்ட், 2022


விநாயகர் பற்றிய கதைகள் அனைத்துமே மிகவும் சுவாரசியமானவை, அவற்றில் ஒன்றுதான் விநாயகரின் இடது தந்தம் உடைந்திருப்பது, உடைந்த தந்தத்தைப்பற்றி இரண்டு விதாமான கதைகள் சொல்லப்படுகிறது.




மகாரிஷி வேத விநாயகரை மஹாபாரதக்கதையை எழுதக்கோரினார்கள் தேவர்கள், மிகவும் பண்டிதரான ஒருவர் தான், தான் சொல்வதைக்கேட்டு புரிந்துக் கொண்டு பிழையின்றி எழுத வேண்டும் என்று நினைத்தார் வியாசர். அதற்காக சிவபெருமானை வேண்டி விநாயகரை எழுதிக்கொடுக்க கேட்குமாறு கூறினார் பிரம்மா.

விநாயகர் அறிவுக்கூர்மைக்கு முதன்மையானவர் என்பதால் வியாசரும் விநாயகரிடம் உதவி கேட்டார், வியாசரின் வேண்டுகோளுக்கு ஒத்துக்கொண்ட விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தார், வியாசர் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து முழு கதையையும் கூற வேண்டும் என்றும், அப்படி சொல்வதை நிறுத்திவிட்டால் தானும் எழுதுவதை நிறுத்திவிட நேரிடும் என்றும், அப்படியே தான் ஒரு வேளை எழுதுவதை நிறுத்தி விட்டால், பிறகு வியாசர் எழுத வேரொருவரைத்தான் தேட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிபந்தனைக்கு சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்தார் விநாயகர்.


சரளமாக வியாசர் தான் ஒத்துக்கொண்டபடி நிறுத்தாமல் மஹாபாரதக்கதையின் பாக்களை சொல்லச்சொல்ல விநாயகரும் தொடர்ந்து வேகமாக எழுதினார், எழுதுவதற்கு முன்பு வியாசர் விநாயகரிடம் தான் கூறும் ஒவ்வொரு பாடலையும் அதன் முழுப்பொருளை புரிந்துக்கொண்ட பின்பே எழுதவேண்டும் என்று கூறினார்.

விநாயகரும் அதற்கு ஒப்புக்கொண்டார் வியாசர் கூறி முடிக்கும் முன்பாகவே விநாயகர் அதன் பொருள் புரிந்து வேகமாக எழுதிக்கொண்டிருந்தார், அப்படி எழுதும் போது அவருடைய எழுத்தானி உடைந்துவிட்டது. வேறு எழுத்தாணி தேட அவகாசம் இன்றியும், தான் போட்ட நிபந்தனையை தானே மீறக்கூடாது என்று நினைத்த விநாயகர் தன் இடது தந்தத்தை உடைத்து அதனைக்கொண்டு எழதி முடித்தார் விநாயகர். இதனாலேயே விநாயகருக்கு ஏகதந்தா (ஓர் தந்தம்) என்ற பெயர் வழங்கப்பட்டது.



இதைப்பற்றி மற்றொரு கதையும் ஒன்று உண்டு, அதாவது பிரம்மானந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கதையின் படி ஒருமுறை விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தன் எதிரி கர்த்தவீர்ய அர்ஜீனனை அழித்து விட்டு சிவனை பார்க்க கைலாசம் வந்தார். அப்பொழுது அவரை வழிமறித்த விநாயகர் தன் தந்தை ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் தற்பொழுது அவரைப்பார்க்க இயலாது என்று கூறிவிட்டார், இதனால் வெகுண்ட பரசுராமர் விநாயகருடன் சண்டையிட துவங்கி விட்டார், பரசுராமருடன் யுத்தம் செய்துக்கொண்டிருந்த விநாயகர் வெற்றியடையும் நிலையில் இருந்தார். அப்போது பரசுராமர் தன் கோடரியை எடுத்து விநாயகரை நோக்கி வீசினார் அந்த கோடாரி சிவன் பரசுராமருக்கு பரிசாக தந்தது என்பதை அறிந்துக்கொண்ட விநாயகர் அந்த ஆயுதத்தை எதிர்த்து போரிடுவது தன் தந்தையை அவமதிப்பதாக இருக்கும் என்றெண்ணி கோடரியின் தாக்குதலை தன் தந்தத்தில் வாங்கிக்கொண்டார். இதனால் விநாயகரின் இடதுபக்க தந்தம் உடைந்து விட்டது.


இவ்விரண்டு கதைகளையும் தவிர்த்து சில அறிவுப் பூர்வமான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. பஞ்ச பூத தத்துவத்தை விளக்கும் உருவம் தான் விநாயகர் என்றும் அவரின் இரண்டு தந்தங்களுள் ஒன்று உணர்ச்சி மற்றொன்று ஞானம் என்றும், ஞானம் முழுமையாய் இருக்கும்போது உணர்வின்நிலை குறைவாகவே இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக விநாயகர் உருவம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுண்டு.

காரணம் எதுவானாலும் சரி, விநாயகரின் தந்தம் முழுமையாக இருந்தாலும் உடைந்திருந்தாலும் எல்லா மக்களுக்கும் செல்லக்கடவுளாக முழு முதற்கடவுளாக விநாயகர் திகழ்கிறார் என்பதில் மட்டும் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent