இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (24.10.2020) 2,886 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

சனி, 24 அக்டோபர், 2020

 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,886 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 4024 பேர் குணமடைந்துள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.




தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 4000-க்கும் பதிவாகி வந்த நிலையில் தற்போது 3000-க்கு கீழ் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.





மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 4,024 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,63,456 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 35 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,893 ஆக அதிகரித்துள்ளது.





மேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 779 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent