இந்த வலைப்பதிவில் தேடு

விசமாக மாறும் உணவு...எச்சரிக்கை பதிவு..

திங்கள், 9 நவம்பர், 2020

 


விசமாக மாறும் உணவு...எச்சரிக்கை பதிவு..


ஆய்வு ஒன்றில், இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஓர் சிறந்த உணவு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


எனவே இனிமேல் வீட்டில் காலையில் இட்லி செய்தால், அதை தவறாமல் சாப்பிடலாம்.






தமிழர்களின் உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகமாக இருக்கின்றன.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் இருக்கிறது.

இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டுடன் உள்ளது.


வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து விடலாம்.

அரிசியினால் உடல் பருமனடைவது போல் உணர்ந்தால், கோதுமையைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம். இது செரிமானத்திற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது.



ஏனெனில் அரிசியினால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் கோதுமையைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம்.


உயிரை பறிக்கும் ரெடிமேட் மாவு



உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு மிகச் சிறந்த உணவு எனக் கருதப்படும் ஆரோக்கிய உணவாக இட்லி தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இன்று உயிரை பறிக்கும் உணவாகவும் அது மாறியுள்ளது.


இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தினால், நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவை பயன்படுத்துகின்றனர். அது நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் என்பது நமக்கு அறியாமலேயே தினந்தோறும் அதை பயன்படுத்தி வருகின்றோம்.

இதற்கு முன்பாக, ஆட்டுக்கல்லில் தான் மாவு அரைத்து சாப்பிடும் பழக்கம் நமக்கு இருந்து வந்தது.


கிரைண்டர் வந்தபின்பு, ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளாக மாறியது. பலருடைய வீடுகளில் பின்புறத்தில் குப்பையாக தான் இன்று உள்ளது.


ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டும் முன்னரும் மாவு ஆட்டிய பின்பும் சுத்தமாகக் கழுவும் பழக்கம் நம்முடைய வீட்டு ஆட்களுக்கு இருந்தது. ஆனால் கடைகளில் மாவு விற்க ஆட்டுவதற்கான அவர்கள் பயன்படுத்தும் பெரிய பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.

மாவு ஆட்டுகின்ற போது, அதன்பிறகு, கிரைண்டரைக் கழுவுகின்ற பொழுது, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால், ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும். இது மாவாட்டுகின்ற பொழுது, இட்லி, தோசை மாவிற்குள் அடைக்கலம் ஆகிவிடும்.




உடல்நலக் குறைபாடுகள்


இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய உடல் நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

வேகவைத்தாலும் அழிவதில்லை


நீங்கள் வெளி கடைகளில் வாங்குகின்ற இட்லி மாவில் ஈகோலி என்னும் பாக்டீரியா இருக்கிறது. நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட, முழுமையாக அழிவதில்லை என்பதுதான் இதில் உள்ள சோகமான விஷயம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent