18 வயதாக இருக்கும்போதே இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.55 பங்களிப்பு வழங்கினால் போதும்.
மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் தரப்பட்டு வருகிறது உங்களுக்கு தெரியுமா?
மத்திய அரசின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டத்தின் பெயர் பிரதமரின் கிசான் மந்தன் யோஜன திட்டம்.
விவசாயிகள் அனைவருக்கும் இந்த திட்டம் மூலம் மாதம் 3000 ரூபாய் பென்ஷன் பெறலாம். 18 வயதாக இருக்கும்போதே இந்த திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் கட்ட வேண்டும் அதுவே 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். இதன் மூலம் நீங்க ஓய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 பென்சன் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் இணையும் விவசாயிக்கு 60 வயது முதல் மாதம் 3 ஆயிரம் பென்சன் பெறலாம். இந்தத் திட்டத்தில் பயன் பெறுவதற்கான வயது வரம்பு 18 முதல் 40 . அதே போல் இந்தத் திட்டத்தில் இணையும் விவசாயி தனது 60 வயதில் இருந்து வயதில் மாதத்துக்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். வயதைப் பொருத்து இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே இந்த திட்டம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம். கூடுதல் விவரங்களுக்கு maandhan.in வலைத்தளத்தில் சென்று பார்க்கவும்.
ஆதார், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற் ஆவணங்களை ரெடி செய்து கொண்டு எளிமையாக இந்த திட்டத்தில் இணையலாம். அதே போல் உறுதியான பென்சன் உண்டு. விவசாயிகளுக்கு இந்த திட்டம் கண்டிப்பாக பயன் தரும். வெறும் ரூ.55 கட்டுவது மூலம் மாதம் 3000 என்பது உண்மையில் பெரிய விஷயம் தான். யோசிக்காமல் சேருங்கள் பயன் பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக