ஒரு வாகனத்தின் ஆயுட்காலம் முடிவடைதற்கு முன்பே அதனை அழிப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். பழைய வாகனங்கள் அழிக்கப்படுவதால், புதிய வாகனங்களுக்கான இடம் பெருகுவதோடு, ஆட்டோமொபைல் உற்பத்தியும் அதிகரிக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி இந்தியாவில் வாகன ஸ்கிராபேஜ் பாலிசியை அமல்படுத்தினார். இந்தப் பாலிசியின்படி, சில ஆண்டுகள் பயன்பாட்டுக்குப் பிறகு, வாகனங்கள் மீது கட்டாயத் தகுதித் தேர்வு விதிக்கப்படும். இந்தப் பாலிசி அமல்படுத்தப்படுவதால் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளைப் போல, வாகனப் பதிவு நடைபெற்றவுடன் அவற்றின் மீதான ஸ்கிராபேஜ் பாலிசி அமலுக்கு வருகிறது. பொதுவாக, தனிநபர்களால் பயன்படுத்தப்படும் பாசஞ்சர் வாகனங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் எனவும், கமர்சியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் ஆயுள் 10 ஆண்டுகள் எனவும் நிர்ணியக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆயுட்காலம் முடிவடைந்த பிறகு, அதே வாகனங்களைப் பயன்படுத்துவது முன்பை விட அதிகமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகின்றன.
மேற்கத்திய நாடுகளில் இப்படியான பாலிசிகளை உருவாக்குவதன் மூலம், பழைய வாகனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்ச்சிக்குள்ளாக்கி மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் இதுபோன்ற பாலிசிகள் இல்லாததால், பழைய வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதையோ, சாலையோரங்களில் பயன்பாடற்றுக் கிடப்பதையோ பார்க்கிறோம்.
வந்துவிட்டது வாகன ஸ்கிராபேஜ் பாலிசி.. உங்கள் வாகனம் அழிக்கப்படுமா.. என்ன சொல்கிறது சட்டம்?
ஒரு வாகனத்தின் ஆயுட்காலம் முடிவடைதற்கு முன்பே அதனை அழிப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும். மேலும், பழைய வாகனங்கள் அழிக்கப்படுவதால், புதிய வாகனங்களுக்கான இடம் பெருகுவதோடு, ஆட்டோமொபைல் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இந்தப் பாலிசியின் அடிப்படையில், 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட தனிநபர் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட கமர்சியல் பயன்பாட்டு வாகனங்களுக்கும் தகுதித் தேர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தகுதிச் சான்றிதழ் பெறாத வாகனங்களின் பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிடும். மேலும், இந்தப் பாலிசியின் மூலம், 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படும் அரசு வாகனங்கள் உடனடியாக மாற்றப்படும். இது நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிலையங்கள் இந்தத் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு தகுதித் தேர்வுக்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்வு முடிவுகளும் ஆன்லைனில் கிடைக்கும். வாகனம் பதிவு செய்யப்பட்ட இடம் மட்டுமின்றி, நாடு முழுவதும் வாகனத்தை ஸ்கிராபேஜ் செய்துகொள்ளலாம்.
வாகனத்தை ஸ்கிராபேஜ் செய்த பிறகு சான்றிதழ் ஒன்று வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி, ஊக்கத்தொகை
பெற்றுக் கொள்ளலாம். மேலும், பழைய வாகனத்தை அழித்த பிறகு, அதற்கு வழங்கப்படும் தொகை புதிய வாகனத்தின் விலையில் சுமார் 5 அல்லது 6 சதவிகித அளவில் இருக்கும்.
வந்துவிட்டது வாகன ஸ்கிராபேஜ் பாலிசி.. உங்கள் வாகனம் அழிக்கப்படுமா.. என்ன சொல்கிறது சட்டம்?
ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழைப் பயன்படுத்தி சாலை வரியில் 5 சதவிதிகம் தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இந்தப் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சான்றிதழைப் பயன்படுத்தி புதிய வாகனங்களுக்கான பதிவுத் தொகை தள்ளுபடியும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்தப் பாலிசியின் மூலம் இந்தியாவிற்குள் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் வரும் எனவும், அதன்மூலம் 50 ஆயிரம் பேரின் வேலை வாய்ப்பு உருவாகும் எனவும் மத்திய வாகனத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்டிருந்தார்.
வாகனங்களை அழிக்கும் நிலையங்கள் தயார் செய்யப்படுவதற்குக் காலத் தாமதமாகும் என்பதால், இந்தப் பாலிசி அமலுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஏற்படலாம். மத்திய சாலை வாகனங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமானே, “வரும் 2023ஆம் ஆண்டிற்கு, கனரக வாகனங்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாத பட்சத்தில், அவை அழிக்கப்படும். தனிநபர் வாகனங்களைப் பொருத்தவரை, இது 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் அமலுக்கு வரும்” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக