இந்த வலைப்பதிவில் தேடு

அதிகம்பேர் வைத்திருக்கும் பாஸ்வேர்டு: உங்களுடையதும் இருக்கிறதா பாருங்கள்?

புதன், 1 பிப்ரவரி, 2023

 




பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல்.. வாழ்க்கையே இணையமயமாகிவிட்ட நிலையில், ஒருவர் பல கடவுச்சொற்களைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். கடவுச்சொல்லை பயன்படுத்துவதே பாதுகாப்புக்காகத்தான். ஆனால் ஞாபக மறதி காரணமாக பலரும் எளிதான பாஸ்வேர்டையே வைத்துக் கொள்கிறோம்.



மின் கட்டணம் கட்டுவது முதல் வங்கிப் பணப்பரிவர்த்தனை செயலிகள் என பலவற்றுக்கும் பல விதமான கடவுச்சொற்களை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் உள்ளது.


மின் கட்டண கணக்குக்கு நாம் வைக்கும் கடவுச்சொல் வேண்டுமானால் நம்மைப்போல பலவீனமாக இருக்கலாம். ஆனால், வங்கிக் கணக்கு, பணப்பரிமாற்ற செயலிகளுக்கு வைக்கும் கடவுச்சொற்கள் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அமைவது அவசியம்.


ஆனால், பலரும் எளிமையாக மிக எளிமையாக, மிக மிக மிக எளிமையாக கடவுச்சொற்களை வைப்பதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். அது தவறு என்றாலும் வேறு வழி இல்லாமல்தான் அப்படி பயன்படுத்துகிறோம்.


இங்கே, உலகளவில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொற்கள்  பட்டியலிடப்பட்டுள்ளன.

அவற்றில் உங்களுடையதும் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், அவை ஒரு சில நொடிகளில் ஹேக் செய்யப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏற்கனவே இதில் ஒன்றை பயன்படுத்தி தற்போது மாற்றியிருந்தால் லேசாக புன்னகைத்துக் கொள்ளுங்கள்.



பாஸ்வேர்ட் (password)


123456

123456789

12345678

1234567890

1234567

qwerty

abc123

xxx

Iloveyou

krishna

123123

abcd1234

1qaz

1234

password1

welcome

654321

qwerty123

passw0rd

asdfgh

monday

monkey

mother

zxcvbnm

555555


இதில், உங்களது பெயர், பிறந்த தேதி, திருமண நாள், பிள்ளையின் பெயர், பிள்ளையின் பிறந்த தேதிகளை நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அவற்றையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது தான் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent