இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களின் நூதன முயற்சி

திங்கள், 30 மே, 2022

 






அரசு தொடக்க பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு டேபிள் பேன் இலவச பள்ளியில் சார்பில் வழங்கப்படும் என ஆசிரியர்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புது முயற்சி கிராம மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13ல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை  தீவிரப்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.




இப்பள்ளி, இயற்கை சூழலில் விலாசமான பள்ளி வளாகம், வகுப்பறை கட்டிடங்கள், கல்வி உபகரணங்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து வசதிகளும் இருந்தாலும் அக்கிராமமக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் இணைந்து மாணவர்சேர்க்கை அதிகரிக்க முடிவு செய்தனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால், மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளியின் சார்பில் டேபிள் பேன் இலவசமாக வழங்கப்படும் என்றும், தரமான இலவச கல்வி, கல்வி உபகரணங்கள், காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படும் என்றும் குறிப்பாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு போட்டி போடும் வகையில் அரசுப் பள்ளியில் தரமான கல்வி கற்றுத்தரப்படும் என்ற உறுதி கூறி மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.


இதன் காரணமாக, முதல் நாள் 4 பேர் பள்ளியில் சேர்ந்தனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பில் ஊராட்சிமன்ற தலைவர் ஜான்சிபிரகாஷ் டேபிள் பேன் வழங்கினர். தொடர் பிரசாரங்கள் மேற்கொண்டு மாணவர்களை அதிக அளவில் சேர்க்க உள்ளதாக தலைமை ஆசிரியர் பூபதி தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent