அரசு பள்ளிகளில், ஆதி திராவிடர் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கை, 20 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
ஆனால், சில பள்ளிகளில் 18 சதவீதத்துக்கும் குறைவாக சேர்க்கை உள்ளது. மேலும், 1,000 பள்ளிகளில், 5 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ளதாக, பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம் வந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக