சேலத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது.
இந்நிலையில், சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், திடீரென பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமாக, ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில், விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஒதுக்கப்படும் என்றும், தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விருப்பப்படும் மையங்கள் ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக