அனுப்பிய மெசேஜ்யை எடிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் கொண்டுவர உள்ளது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் எதிர்கால அப்டேட்களை கருத்தில் கொண்டு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் உள்ள தட்டச்சுப் பிழைகளை நீக்க இனி அந்த மெசேஜை முழுமையாக டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சோதனை நடப்பதாகவும், ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், மற்றும் டெஸ்க்டாப் என அனைத்திலும் இவ்வசதி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக