புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்தத்தில் 4ம் வகுப்பு மாணவர் காயம் அடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி 40 ஆண்டுக்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி ஆகும். மிகவும் பழுதடைந்து காணப்படுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த பள்ளியில் உள்ள சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அந்த ஆசிரியர் மாணவர்களை அழைத்து சென்று மரத்தடியில் வைத்து பாடம் நடத்தி வந்தனர்.
இதனிடையில் ஒரு மாணவன் மட்டும் அந்த வகுப்பறையில் கதவு அருகே உட்காந்து படித்து கொண்டிருந்த நிலையில் திடீரென வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரத் என்ற மாணவன் படுகாயம் அடைந்தான். அதன்பிறகு உடனடியாக அந்த மாணவனை ஆலங்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைகாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பள்ளிகளை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்து நடந்த பள்ளியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பழுதடைந்த கட்டிடத்தை உடனடியாக இடிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக