இந்த வலைப்பதிவில் தேடு

தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி 344 மார்க் பெற்று வெற்றி

திங்கள், 20 ஜூன், 2022

 





திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சி கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பா(17), பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த இவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஆனால் தேர்வு சரியாக எழுதவில்லை. மதிப்பெண்கள் மிக குறைவாக வரும், தேர்ச்சி பெறுவது சந்தேகம் என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து வந்தனர்.



இந்நிலையில் நேற்று மாலை பாயமானார். இதனால் பெற்றோர், மகளை பல இடங்களில் தேடிச் சென்றனர். அப்போது இவர்களது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் யாரோ குதிக்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் செடிகள் அதிகளவு வளர்ந்திருந்ததால் யார் என கண்டறிய முடியவில்லை. ஆனாலும் காவலூர் போலீசார் மற்றும் ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் வந்து கிணற்றில் இறங்கி தேடினர். இரவாகிவிட்டதால் தேடும் பணியை கைவிட்டனர். இன்று காலை தேடியபோது பாயை சடலமாக மீட்டனர்.


இதுகுறித்து காவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இன்று வெளியான பிளஸ் 2 ேதர்வு முடிவில் பா 344 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது. இது அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதியினரிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent