தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், 57 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பகுதி நேர டிப்ளமா மற்றும் நேரடி டிப்ளமா படிப்பு சேர்க்கைக்கு, www.tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.ஜூலை, 8 வரை பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்ப விபரங்கள், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப பதிவு செய்வதற்கான உதவி மையங்கள் உள்ளிட்ட விபரங்களை, www.tnpoly.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக