கல்வி உதவித் தொகைக்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் அறிதல் தேர்வு நடத்தப்பட்டு, மூன்று மாதங்களாகியும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நாடு முழுதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு, உயர்கல்வி படிக்க, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், 'ஸ்காலர்ஷிப்' எனப்படும், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பதற்கான கல்வி உதவித்தொகை வழங்க, என்.எம்.எம்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் அறிதல் தேர்வு நடத்தப்படுகிறது.ஒவ்வொரு மாநிலமும், இந்த திறனறிதல் தேர்வு நடத்தி, தகுதியான மாணவர்களை தேர்வு செய்கின்றன. தமிழகத்தில், 6,995 மாணவர்களை தேர்வு செய்வதற்கான திறனறிதல் தேர்வு, மார்ச், 5ல் நடந்தது. தேர்வில், 1.44 லட்சம் மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும், தமிழகபள்ளிக்கல்வி துறை இன்னும் தேர்வு முடிவுகளை அறிவிக்கவில்லை.தேர்வை எழுதிய 8ம் வகுப்பு மாணவர்கள், அடுத்த கல்வி ஆண்டில் 9ம் வகுப்புகளுக்கு செல்ல தயாராகி விட்ட நிலையில், தேர்வு முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக