இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி மாணவர்கள் அசத்தல்

திங்கள், 6 ஜூன், 2022

 




வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 301 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இதில் இந்த ஆண்டு பிளஸ்2 வகுப்பில்58 மாணவ- மாணவிகள் படித்துதேர்வு எழுதி உள்ளனர். இந்த ஆண்டுபள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலா ரூ.300 வீதம் அளித்து 15,000 சேகரித்தனர்.



இந்த தொகையில் தங்கள்படித்த பள்ளியில் இரண்டு அறைகளுக்கு புதிதாக மாணவ-மாணவிகளே பெயிண்ட் அடித்து பள்ளி சுவர்களில் திருக்குறளை எழுதி புதுப்பொலிவுடன் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரிடம் ஒப்படைத்தனர்.மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பாராட்டு விழா நடத்தினர். 


விழாவிற்கு பள்ளி மாணவி மணிபாரதி தலைமை தாங்கினார். மாணவர் ராஜதுரை வரவேற்றார்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்தர்மதுரை,பொருளாளர் ராமலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் பெருமாள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவிகளை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குசால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent