இந்த வலைப்பதிவில் தேடு

பேருந்துகளில் GPay முறைகளில் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்: அமைச்சர்

திங்கள், 6 ஜூன், 2022

 





பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ - டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ - டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம்.



பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் அதிகளவில் ஆப்செண்ட் இருப்பதால் தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்..ஆய்விற்கு பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனர்,'என்றார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent