இந்த வலைப்பதிவில் தேடு

9ம் வகுப்பு ஆல் பாஸ்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

திங்கள், 6 ஜூன், 2022

 






9ம் வகுப்பு தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை என்றும் பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அண்மையில் பொதுதேர்வுகள் முடிவடைந்தது. அதற்கு முன்னதாகவே 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு இறுதித்தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில், 9ம் வரை அனைவரும் தேர்ச்சி பெறுவார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு மாணவர்களிடையே நிலவி வந்தது. 1 முதல் 8ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைவரும் தேர்ச்சி என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,   9ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்தநிலையில், தற்போது கல்வித்துறை அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அதன்படி 9ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வை முயற்சி செய்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான சுற்றறிக்கை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டது. கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டது, பாடத்திட்டம் குறைக்கப்பட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 9ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அதிகாரிகள் அறிவித்த நிலையில், இது மாணவர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent