கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கும் திட்டத்தை 1979ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகையை கொண்டு தான் இதுவரை ஊழியர்கள் ஓய்வுக்கு முன்பாக பெற்ற கடன்கள் மற்றும் மகன், மகள் கல்வி கடன்கள் மற்றும் திருமண கடன்களை அடைத்துவிட்டு கிடைக்கும் மீத தொகையில் வங்கியில் டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியை மட்டுமே கொண்டு பிழைப்பை நடத்தும் நிலை இருந்தது.
இதுவரை பணிக்கொடை திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது, பணிக்கொடை தொகை அசல் மட்டுமே வழங்கப்படும். வட்டித்தொகை வழங்கப்படாது என்று நிர்வாகம் முடிவு எடுத்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணிக்கொடை முழுமையாக வழங்க கோரியும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சார்பில் நாளை கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக