நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் - "NO WORK NO PAY" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் 9ஆம் தேதிவரை மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் (SRG8/2019) தங்களது 11 அம்ச - கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 07.06.2022 முதல் 09.06.2022 வரை மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக